உங்கள் வீட்டு ஆண் குழந்தையிடம் இந்த 5 விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறீர்களா?

குழந்தை
குழந்தை வளர்ப்பு என்பது காலந்தோறும் மாறி வருகிற ஒன்று. ஏனென்றால் குழந்தைகள் தங்கள் சுற்றியுள்ள விஷயங்களை உன்னிப்பாகக் கவனித்துவருபவர்கள். வீட்டுக்குள், சமூகத்துக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் அனைத்துமே அவர்களிடம் ஏதோ ஒரு வகையில் சென்று சேர்ந்திருக்கும். குறிப்பாகத் தொழில்நுட்ப வளர்ச்சி. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியின் வருகையால் குழந்தைகள் வளரும் போக்கில் பெரிய மாறுதலைக் காணமுடிந்தது. தற்போது, ஃபேஸ் புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட விஷயங்களின் தாக்கம் குழந்தைகளிடம் பெரிய அளவில் இருக்கின்றன.
காலமாற்றத்தில் பலவும் மாறினாலும் சில விஷயங்களின் அடிப்படை மட்டும் மாறுவதேயில்லை. அதில் ஒன்று பெண்கள் குறித்த ஆண்களின் மனநிலை. ஆணாதிக்க மனநிலை கொண்டு நமது சமூகச் சூழலில் வளரும் ஆண் குழந்தைகளுக்கும் அதே மனநிலைதான் வாய்க்கப்பெறுகிறது. அவர்கள் பெரியவர்களான பிறகு, பெண்கள் மீதான வன்முறை செய்திகளைக் கேள்விப் படும்போது அதிக வருத்தம் கொள்ளாதவர்களாகவே இருக்கின்றனர். அவர்களில் பலர், தன்னோடு இணைந்து வாழும் மனைவி, தன் மகள், அம்மா, சகோதரி உள்ளிட்ட பெண்களிடம்  தனிக் கவனம் காட்டும் அளவுக்குச் சமூகத்தின் மற்ற பெண்களுக்குக் காட்டுவதில்லை. இந்த நிலையில் மாற்றம் வர வேண்டுமெனில் நம் வீட்டு ஆண் குழந்தைகள் வளர்ப்பில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக இந்த 5 விஷயங்களை அக்கறையோடு கூறி வளர்க்க வேண்டியது அவசியம். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
குழந்தை
1. வீட்டு வேலை செய்வது இழிவானதல்ல: வீட்டைப் பெருக்குவது, சமைப்பது, பாத்திரங்கள் சுத்தப்படுவது... என வீட்டின் வேலைகளைப் பட்டியலிட்டால் அவற்றில் 90 சதவிகிதம் பெண்கள்தான் பார்க்கின்றனர். இதைப் பார்த்தே வளரும் பெண் குழந்தைகள், தாங்கள் பெரியவர்கள் ஆனதும் இந்த வேலைகளை நாம் கட்டாயம் செய்ய வேண்டும் என நினைக்க வைக்கப் படுகின்றனர். ஆண் குழந்தைகளும் வீட்டு வேலைகள் பெண்களுக்கானது என்கிற எண்ணத்தை மனதில்  பதிய வைத்துக்கொள்கிறார்கள். அந்த எண்ணம் தவறு என்பதையும் நாம் சாப்பிடுகிற உணவைச் சமைக்கவும், அதற்குப் பயன்படுத்திய பாத்திரத்தைச் சுத்தப்படுத்தவும் செய்கிற வேலைகளை ஆண்கள் செய்வது இழிவானது இல்லை என்பதை ஆண் குழந்தைகள் புரிந்துகொள்ளும் விதத்தில் கூறி வளர்க்க வேண்டும்.
2. ஒரு பெண் ஓர் ஆணோடு சகஜமாக உரையாட முடியும்: இதுவும் முக்கியமானதொரு விஷயமே. ஒரு பெண்ணோடு காதல், காமம் இன்றி நட்போடு பேச முடியும் என்பதைப் புரிய வைப்போதோடு, ஒரு பெண் ஓர் ஆணோடு பேசுவதைத் தவறாகப் பார்க்கக்கூடாது என்கிற எண்ணத்தையும் விதைக்க வேண்டும். ஆண், பெண் இருவரிடையே சகஜமான ஓர் உரையாடல் சாத்தியம் என்பதை அவர்கள் விளங்கிகொள்ளச் செய்ய வேண்டும். காலமாற்றத்தில் இது இயல்பாகி விட்டது என்று சொல்பவர்கள் இருந்தாலும் பதின் வயதில் ஏற்படும் மிகச் சிக்கலான ஒன்றாக இதுவே உள்ளது.
3.  அப்பாவின் பெயர் சொல்லி அம்மா அழைப்பது தவறல்ல: கணவன் - மனைவியிடையே நல்ல புரிதலும் அன்பும் இருக்க வேண்டுமே தவிர அதிகாரம் இருக்கக்கூடாது. அன்பின் மிகுதியில் பெயர் சொல்லி அழைக்கக்கூடும். அதைப் பார்த்த பிள்ளைகள் குறிப்பாக ஆண் குழந்தை அதிர்ச்சியாகலாம். ஏனெனில் அவனின் நண்பர்கள் வீட்டில் அந்தப் பழக்கம் இருந்திருக்காது. இங்கே சொல்வது பெயர் சொல்லி அழைப்பது என்பது மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் மரியாதை தருவது, உணர்வுகளைப் புரிந்துகொள்வது உட்பட அனைத்தும்தான். இவற்றை ஆண் குழந்தைகள் உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்ளும் போது வீட்டின் ஆண் தன்மை விடுபடக்கூடும்.
குழந்தை
4. நிறத்தில், விளையாட்டில் ஆண், பெண் பேதமில்லை: பண்டிகைகளுக்கு உடை எடுக்க, கடைக்குச் சென்றால் பிங்க் நிறத்தில் ஆண் குழந்தைகளுக்கு உடை தேர்வு செய்தால் வலுகட்டாயமாக அதை மறுக்கின்றனர். ஏனெனில் அது பெண்களின் நிறமாம். இங்குத் தொடங்கி, விளையாட்டில், பயன்படுத்தும் வார்த்தைகளில் ஆண், பெண் என வித்தியாசம் பார்க்கின்றனர். இந்தக் குணத்தையும் மாற்ற வேண்டியது அவசியம்.
5. பாலினப் பாகுபாடு கிண்டலாக வெளிப்படுதல் கூடாது: மிகவும் முக்கியமான விஷயம் இதுதான். பள்ளியிலோ வீட்டிலோ தெருவிலோ தன் சக நண்பனைக் கிண்டல் செய்ய அவனை பெண் என்றோ திருநங்கை என்றோ சொல்லும் பழக்கம் ஆண் குழந்தைகள் பலரிடம் இருக்கிறது. இதுவும் சமூகத்தில் உள்ளவற்றைப் பார்த்து பழகிக்கொண்டதுதான். ஆனால், இது மிகவும் தவறான பழக்கம். எனவே கிண்டல் செய்யும் போது பாலினத்தைக் குறிப்பிடுவது அந்த நண்பனை மட்டும் காயப்படுத்தாது, குறிப்பிடப்படும் பாலினத்தையே காயப்படுத்துவதுபோல.

மார்பில் சுரக்கும் மாமருந்து!

தாய்மை... இந்த உலகத்தின் ஆகச்சிறந்த அழகு! உலகத் தாய்ப்பால் வாரம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழு தினங்கள் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவும், உலக சுகாதார நிறுவனமும் பிரபஞ்சத்தின் மத்தியில் நின்றுகொண்டு `தாய்ப்பால்... தாய்ப்பால்’ எனத் தலையில் அடித்துக் கதறுகின்றன. மருத்துவமனைகள், ஆட்சியர் அலுவலகங்கள், சமுதாயக் கூடங்கள், கல்லூரிகள், பள்ளிகள் எனக் களமிறங்கி விழிப்பு உணர்வை ஏற்படுத்தச் சொல்கின்றன. அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸும் (The Amercian Academy of Pediatrics) தாய்ப்பால் புகட்டுதலை மிகவும் தீர்க்கமாக வலியுறுத்துகிறது.
நாம் என்ன செய்கிறோம்? ‘இதெற்கெல்லாமா நோட்டீஸ் கொடுப்பீர்கள்?’ எனச் சலித்துக்கொண்டு துண்டுச்சீட்டுகளைச் சுருட்டி தெருவோரம் வீசிவிட்டுப் போகிறோம். ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் புரியும்... ஒரு தாயிடம், அவள் குழந்தைக்கு, அவள் பாலை புகட்ட, அவளிடமே கெஞ்சிக்கொண்டிருப்பது எத்தனை அபத்தம் என்பது! இது உலகளாவிய உணர்வுப் பிரச்னை.
2015-ம் ஆண்டின் கணக்கெடுப்பில் ஐந்து தாய்மார்களில் நான்கு பேர் தாய்ப்பால் கொடுப்பதில்லை என்ற பேரதிர்ச்சியை யுனெஸ்கோ முன்வைக்கிறது. கல்வியில் மிகவும் பின்தங்கிய சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில்கூட 50% பேர் தாய்ப்பால் புகட்டுகின்றனர். ஆனால், தமிழகத்தில் 18.8%, குறிப்பாகச் சென்னையில் 7% தாய்மார்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதாகச் சொல்லும் புள்ளிவிவரங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
தாய்மை வரம்; தாய்ப்பால் வரப்பிரசாதம். கருத்தரித்த நாள் முதல் அந்த சிசுவுக்காகவே தாயின் உடலும் மனமும் பழக்கப்படுகிறது. சுகப்பிரசவம் என்றால் அரை மணி நேரத்துக்குள்ளும், அறுவை சிகிச்சை என்றால் ஒன்றரை மணி நேரத்துக்குள்ளும் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அதன் ஸ்பரிசத்தைத் தேடும் தாயின் தவிப்பும், அவளின் பால் வீச்சத்துக்கு, கதகதப்புக்கு ஏங்கும் குழந்தையின் துடிப்பும் அற்புதம்! அம்மாவுக்கும் குழந்தைக்குமான உளவியல் ரீதியான தீண்டல், அரவணைப்பு, பாதுகாப்பு போன்ற அனுசரணைகளை எப்படி செயற்கைப் பாலில் எதிர்பார்க்க முடியும்?
‘ஊர் கூடித் தேர் இழுக்கிறீர்களே, அப்படி என்னதான் இருக்கிறது தாய்ப்பாலில்?’ என்ற கேள்வியை முன் வைத்தால், இவைதான் பதில்... குழந்தை பிறந்து முதல் இரண்டு நாட்கள் சுரக்கும் ‘கொலாஸ்ட்ரம்’ எனும் சீம்பாலில்தான் குழந்தைக்கு நோயை அண்டவிடாத ஆன்டிபாடீஸ் (ANTIBODIES) தடுப்பு மருந்து இருக்கிறது. குழந்தைக்கு ஆறு மாதங்கள் கண்டிப்பாகத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு ஒரு வருடமாவது தாய்ப்பாலுடன் சேர்ந்த இணை உணவு அவசியம். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் நரம்பு மண்டலத்துக்கும் வலு சேர்க்கக்கூடிய, எளிதில் செரிக்கும் புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்பு, மாவுச்சத்து இவற்றோடு விட்டமின்களும் தாய்ப்பாலில் அதிகம் நிறைந்துள்ளன.
குழந்தைக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளில் இருந்து தாய்ப்பாலில் உள்ள சத்துகள் காப்பதோடு, டயாபடிஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை அண்டவிடாமல் தடுக்கும் எனவும் மருத்துவம் கூறுகிறது. அத்துடன் தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டம் கர்ப்பத்தடைக்கான நாட்களாகவும் கருதப்படுகிறது. தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப்புற்று மற்றும் சினைப்பை புற்றுநோய் வரும் தன்மையும் தடுக்கப்படும் என்கிறது இந்திய மருத்துவக்கழக ஆராய்ச்சி.
இன்றைய இளம் தாய்கள், ‘நாங்கள் வேலைக்குச் செல்கிறோம். இதெல்லாம் சரிப்பட்டு வராது!’ என்கிறார்கள். அரசு வேலைக்குச் செல்பவர்களுக்கு அரசாங்கம், அதிகப்படியான பேறுகால விடுமுறைச் சலுகைகள் வழங்குகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், ‘எங்களுக்கு ஓரிரு மாதங்கள்தான் விடுமுறை. பிரெஸ்ட் பீடிங்கா... நோ சான்ஸ்!’ என்கிறார்கள். மனம் புறக்கணிக்கிறபோது, அறிவியல் அவசரமாக ஆட்கொள்கிறது. ‘அம்மாக்களே... அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்...’ என்ற பதற்றத்தில், பிரெஸ்ட் பம்ப்புகள் மூலம் தாய்ப்பாலை எடுத்து குளிர்சாதனப் பெட்டிகளில் பதப்படுத்தி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் எனக் கண்டுபிடித்துவிட்டார்கள். அறை வெப்பநிலையில் 8 மணி நேரமும், ஃபிரீசரில் 24 மணிநேரமும் வைக்க லாம். மேலும் மைனஸ் 20 டிகிரி சென்டிகிரேடில் மூன்று மாதங்கள் வரைகூட பதப்படுத்தி அதன் தன்மை மாறாமல் குழந்தைக்குக் கொடுக்கலாம் என்கிறார்கள். ரத்த வங்கி போல தாய்ப்பால் வங்கியும் மெள்ள நடை முறைக்கு வருகிறது.
இத்தனை இணக்கமான சூழல் இருந்தும், நஞ்சேறிய பவுடர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி தரிசான வாரிசுகளை உருவாக்கி வருகிறோமே ஏன்? வெளியில் சொல்ல முடியாத அந்த நெருடலில்தான் குழந்தைகளின் இறப்பு விகிதம் கூடிக்கொண்டே போகிறது. தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என இன்றைய இளம் பெண்களில் பெரும்பாலானவர்கள் கங்கணம் கட்டிவிட்டார்கள். எத்தனை வேதனை இது? இந்த அறியாமையை எப்படிப் போக்குவது என்பதில் மருத்துவம் உறைந்து நிற்கிறது.
போர்க்களத்தில் போரிட்டு வீர மரணம் எதிர்கொள்ளும் தறுவாயில், வீரர்களின் உயிர் பிழைக்க தங்கள் மார்பகக் காம்புகளைப் பிழிந்து பால் ஊட்டிய சங்க இலக்கியத் தாய்களின் ஈரப்பதம் எங்கே போயிற்று? தாய்ப்பால் என்பது தாயின் அன்பு, அவளது அறிவு, மடைமாற்றம் செய்யப்படும் மூதாதையரின் குணம் அனைத்தும் அடங்கியது. இப்படி அணு அணுவாய் அனுபவித்து குழந்தைக்குத் தாயாகி மகிழும் நிலையான அழகைவிட, நிறப்பூச்சுகளில் மயங்கி, சுருக்கம் விழக் காத்திருக்கும் நீர் வற்றிய வெற்றுத் தோல் எப்படி அழகாகும்?
என் குழந்தையின் எதிர்காலத்துக்காகத்தான் உழைக்கிறேன் என இரவும் பகலுமாக அதைப் பட்டினிபோட்டு ஆலாய்ப் பறக்கிறீர்கள். செடிக்கு நீர் ஊற்றாமல் மரம் வளரக் காத்திருப்பது மூடத்தனம். உங்கள் சம்பளத்தை விட, சேமிப்பைவிட, பேங்க் பேலன்ஸ் நிறைவதைவிட, உங்களை மட்டுமே நம்பி பூமிக்கு வந்த அந்தப் பச்சிளம் குழந்தையின் வயிறு நிறைவதுதான் முக்கியம். உங்கள் மார்பில் ஊறும் பால், அதன் உணவு மட்டுமல்ல, உணர்வும் மருந்தும்!
அகிலா கிருஷ்ணமூர்த்தி

குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்(Massage oils for Babies)



குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய செய்யத் தான், அவர்களது எலும்புகள் வலுவடைவதோடு, வளர்ச்சியும் சீராக இருக்கும்.


குழந்தைகளுக்கு மசாஜ் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய செய்யத் தான், அவர்களது எலும்புகள் வலுவடைவதோடு, வளர்ச்சியும் சீராக இருக்கும். எனவே பிறந்த குழந்தைக்கு தினமும் குளிப்பாட்டுவதற்கு முன் சிறிது நேரம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.

எப்போது குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதாக இருந்தாலும், இயற்கை எண்ணெய்களை பயன்படுத்துங்கள். இப்போது குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்கு எந்த எண்ணெய்களைப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய் :

பெரும்பாலானோர் உடல் மசாஜ் என்றால் தேங்காய் எண்ணெயைத் தான் பயன்படுத்துவார்கள். அதிலும் குழந்தைகளுக்கு இந்த எண்ணெயை வெதுவெதுப்புடன் சூடாக்கி, மசாஜ் செய்தால், சருமம் நன்கு மென்மையாகவும், எலும்புகள் வலுவுடனும் இருக்கும்.

கடுகு எண்ணெய் :

தற்போது நிறைய வீட்டில் கடுகு எண்ணெயின் பயன்பாடு அதிகம் உள்ளது. மேலும் உடலுக்கு மசாஜ் செய்யவும், பலர் இதனைப் பயன்படுத்துகிறார்கள். இதனைப் பயன்படுத்துவதால், உடல் வெதுவெதுப்புடனும், எலும்புகள் வலுவுடனும் இருப்பதோடு, சளி மற்றும் ஜலதோஷம் இருந்தால், நல்ல நிவாரணமும் கிடைக்கும். குறிப்பாக இந்த எண்ணெயை குளிர்காலத்தில் பயன்படுத்துவது நல்லது. அதிலும் வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு உடலுக்கு மசாஜ் செய்தால், தேவையற்ற இடங்களில் வளரும் முடியை தவிர்க்கலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே இந்த மாதிரியான மசாஜ் செய்தால், தேவையில்லாமல் குழந்தை அழுவதைத் தடுக்கலாம்.

ஆலிவ் ஆயில் :

ஆலிவ் ஆயில் முடியின் வளர்ச்சிக்கு சிறந்தது. ஒருவேளை குழந்தைக்கு முடி வளர்ச்சி குறைவாக இருந்தால், ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால், முடி வளர்ச்சியானது அதிகரிக்கும். அதிலும் இந்த எண்ணெயை உடல் முழுவதும் தடவி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளிப்பாட்டினால், எலும்புகள் வலுவடைந்து, உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

இவையே குழந்தைகளுக்கு மசாஜ் செய்யப் பயன்படுத்தும் எண்ணெய்கள். ஒருவேளை குழந்தைக்கு இந்த எண்ணெயால் அரிப்பு ஏற்பட ஆரம்பித்தால், இந்த எண்ணெய்களை பயன்படுத்துவதை நிறுத்திவிடவும். முக்கியமாக, குழந்தைக்கு எந்த எண்ணெயை பயன்படுத்த நினைத்தாலும், முதலில் அவர்கள் அணிந்திருக்கும் அனைத்து ஆபரணங்களையும் அகற்றிவிட்டு, பின் தொடர வேண்டும்.

குழந்தை வளரும் சூழலை சிறப்பானதாக்க, பெற்றோர்கள் செய்ய வேண்டியவை!

குழந்தை வளரும் சூழலை சிறப்பானதாக்க,  பெற்றோர்கள் செய்ய வேண்டியவை! #VikatanPhotoCards
குழந்தை வளரும் சூழலை சிறப்பானதாக்க,  பெற்றோர்கள் செய்ய வேண்டியவை! #VikatanPhotoCards
குழந்தை வளரும் சூழலை சிறப்பானதாக்க,  பெற்றோர்கள் செய்ய வேண்டியவை! #VikatanPhotoCards
குழந்தை வளரும் சூழலை சிறப்பானதாக்க,  பெற்றோர்கள் செய்ய வேண்டியவை! #VikatanPhotoCards
குழந்தை வளரும் சூழலை சிறப்பானதாக்க,  பெற்றோர்கள் செய்ய வேண்டியவை! #VikatanPhotoCards
குழந்தை வளரும் சூழலை சிறப்பானதாக்க,  பெற்றோர்கள் செய்ய வேண்டியவை! #VikatanPhotoCards
குழந்தை வளரும் சூழலை சிறப்பானதாக்க,  பெற்றோர்கள் செய்ய வேண்டியவை! #VikatanPhotoCards
குழந்தை வளரும் சூழலை சிறப்பானதாக்க,  பெற்றோர்கள் செய்ய வேண்டியவை! #VikatanPhotoCards
குழந்தை வளரும் சூழலை சிறப்பானதாக்க,  பெற்றோர்கள் செய்ய வேண்டியவை! #VikatanPhotoCards
குழந்தை வளரும் சூழலை சிறப்பானதாக்க,  பெற்றோர்கள் செய்ய வேண்டியவை! #VikatanPhotoCards
குழந்தை வளரும் சூழலை சிறப்பானதாக்க,  பெற்றோர்கள் செய்ய வேண்டியவை! #VikatanPhotoCards
குழந்தை வளரும் சூழலை சிறப்பானதாக்க,  பெற்றோர்கள் செய்ய வேண்டியவை! #VikatanPhotoCards

what to do for Kids?

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.
2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு
துணை புரியும்.
3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்
உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா?
நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள்
அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.
4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்
டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள்.
ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.
5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள்.
அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
இடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும்.
சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய்
அமையும்
6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக
கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள்.
அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை
மனக் கவலைகளை நீக்கி
உங்கள் மீது அவர்களையறியாத
ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.
7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள்.
ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.
8. உண்மை, நேர்மை,
துணிவு,
விட்டுக் கொடுத்தல், மன்னித்தல்,
அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை
ஊட்டுங்கள்.
9. பொய், ஏமாற்று,
திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.
10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள்.
பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.
11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள்.
கல்வியின் முக்கியத்துவம்,
ஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.
12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள்.
பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்.
அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.
13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள்.
அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.
14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்
படுத்துங்கள்;
அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.
15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;
கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும்,
அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.
16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும்.
அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள்.
குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது
(பயந்த
சுபாவத்தையும்
தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும்,
சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதை புரியவையுங்கள்.
இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.
குறிப்பு:
நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு
எந்த மருந்துகளாலும் மருத்துவ
முறைகளாலும் நிரந்தராமான
தீர்வை தர இயலாது.
(Read in Facebook. Thanks to the original uploader)

10 Things Parents Shouldn’t Do for Their Children

Sometimes parents help their children too much. Adults can’t live their children’s lives for them. Our task is to help them grow and gain their own experience, and it’s important not to overdo it.
Bright Side has collected a few things that we should never do for our children. Take these things into account, and your children will thank you.

1. Talk for them

It all starts with those happy moments when a small kid is asked, “Oh, what is your name?” and we, the parents, want to respond, “It’s Jason.” It would be nice if this habit ended once a child learns to speak. But no, we manage to give answers even for our teenage children everywhere: in stores, at home, and in other places.
And what do we have in the end? We take from our kids the chance to answer for themselves. You can give a hint to a kid about what to say if they ask you to. But you definitely should never talk for them.
What to do? Next time when you want to speak for your child, try to stop yourself. Let them speak for themselves.

2. Be their friend

Many parents try to become friends with their children, and they don’t want their kids to have any secrets from them. We can easily understand why parents want this, but let’s try to look at this a little deeper. What is a friend? It’s a person you can talk to on equal terms. Yes, you can tell anything to a friend.
However, parents have a different role: they care about us and love us. There is no need to try to be very close friends. Let kids look for their own friends among people their own age. Mom and Dad are there for when kids need love and support.
What to do? Say no to being too close in a relationship. Learn to support and respect each other.

3. Want vs need

We know very well that broccoli is much healthier than candy and that new sneakers are more useful than dolls. So we dictate to our children (sometimes we hide it, and sometimes we don’t) what they should want. It’s like the joke, “Mom, am I hungry?” “No, you are cold and you want to be in a warm place.”
What do such things lead to? They suppress a child’s “me,” their wishes, and their goals. Such things also lead to being a blameless victim or even a rebellion against everyone.
What to do? Search for the needs and wishes of the child. If you need to teach them good habits, don’t do it violently. Do it smoothly.

4. Help them too much

2- and 3-year-old children can already put on and take off different clothes by themselves, wash cups, and put dirty clothes in the washing machine. More than that, at this age, children really want to do it by themselves.
And what do we do? We dress them almost until they get married. We support this behavior with the arguments “He can’t do it!” We feed them, we don’t let them do it themselves, and we don’t let them experiment. And later on, we are surprised when a teenager is untidy or doesn’t want to help their mother.
What to do? Let the kid do as much as possible by themselves.

5. Choose their tastes

We often try to impose our music tastes, book preferences, and clothing styles on our children. It is with good intentions, but it diminishes a child’s individuality. And in many cases, it leads to a protest where kids do the complete opposite.
What to do? Watch your favorite movies and listen to the music you love yourself. Discuss your idols with your children.

6. Count their money

In every child’s life, there comes a moment where they have their own pocket money. What you shouldn’t do is interrogate children and try to find out how much money they have left. The worst thing you can do is check their bags or pockets. This kills trust instantly.
Does it really matter how much money your son or daughter has left? Let them save for something they want.
What to do? Teach your children to be financially successful, and let them do what they want with their money.

7. Choose their hobbies and interests

Mom wants her daughter to play the violin and is ready to take her across the entire city to music school 3 times a week. And Dad wants his son to play football every evening. And parents often subconsciously try to impose a hobby on their children.
What to do? Be patient, and watch your kids. Notice their interests and inclinations. Ask them what they like, and then let them develop in this field.

8. Take their successes as yours

Caring “Insta-mothers” post a lot of pictures and write, “We have eaten!” “We have started to walk!” and so on. Of course, they support their children a lot, but still, these are not the mothers’ successes —they are the children’s! Who is “we”?
And when the children grow up, things get even more serious. Moms and dads start telling about how their kids finished college and found jobs. And they do it like these are their merits only. It is easy to understand how much children hate this.
What to do? Be happy for your children’s successes, but don’t confuse them with your own.

9. Choose their presents

When a child can already speak, they have the right to choose what they want as presents. And it doesn’t have to be another T-shirt or a toy that is supposed to develop them educationally.
Of course, it is not always possible to let them choose. But it gives children the most important thing: the ability to choose, to make decisions, and to face the consequences. Such skills can never hurt in adult life.
What to do? Let your child choose the presents they want.

10. Intrude in their personal lives

This is especially true for the parents of teenagers. Kids have their own friends and first dates. It is normal and absolutely natural. An interrogation of “Who is that guy?” will only make your child annoyed. Many children will share such personal things with their parents if they feel safe.
What to do? Instead of interrogating your child, let them have their own private space. Don’t ask too many questions if you see that they don’t want to share details. And, of course, don’t ever secretly read your children’s texts.
What parenting secrets do you know? Share them in the comment section below!
Illustrated by Igor Polushin for BrightSide.me

குழந்தைகளிடம் சொல்லக்கூடாத நெகடிவ் வார்த்தைகள் (Dont tell this negative words to children)





குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. நாம் என்ன பேசுகிறோமோ, அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாகப் பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

1. எந்தச் சூழ்நிலையிலும் 'நீ ஒரு கெட்ட பையன் (பெண்)' என்ற வார்த்தையைப் பயன்படுத்த கூடாது. குழந்தைகள் எதையும் முழுமையாக நம்பும் மனநிலைகொண்டவர்கள். அவர்கள் தவறே செய்துவிட்டாலும், குற்றவாளியாக்கும் வார்த்தைகளைச் சொல்லக் கூடாது. அதற்கு மாறாக, ''நீ ரொம்ப நல்ல பையனாச்சே. இப்படி நடந்துக்கலாமா? இதனால் மற்றவர்கள் என்ன நினைப்பாங்க தெரியுமா?'' என பக்குவமாகப் பேசி நல்லது, கெட்டதைப் புரியவைக்க வேண்டும்.

2. 'நீ உன் சகோதரன் / சகோதரி மாதிரி இல்லை' என்ற ஒப்பீடும் வேண்டாம். உலகில் யாருமே பயனற்றவர்கள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். மற்றவர்களோடு ஒப்பீடு செய்யும்போது, சகோதர, சகோதரிகளின் மீது வெறுப்பும் பொறாமையும் ஏற்படும். வாழ்வில் பெரிதாக தோல்வி அடைந்ததாக நினைப்பார்கள். இது, சக குழந்தைகளிடையே பிரச்னையை ஏற்படுத்தும்.



3. எதற்கெடுத்தாலும் ‘நோ’ சொல்லாதீர்கள். ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, 'இல்லே, முடியாது, நோ' போன்ற வர்த்தைகளை சட்டெனப் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் பெற்றோர் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். குழந்தை கேட்கும் விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால், 'அப்புறம் பார்க்கலாம், இது ஏன் தேவையற்றது' என விளக்குங்கள்.

4. 'என்னோடு பேசாதே' என்ற வார்த்தை வேண்டாம். பேசுதல், அரவணைத்தல் மூலமே பெற்றோர் - குழந்தைகள் பிணைப்பு பலப்படுகிறது. எனவே, ‘‘என்னோடு பேசாதே’’ என முகத்தில் அடிப்பது போல பேச்சைத் துண்டிக்காதீர்கள். குழந்தைகள் மனதில் உள்ள விஷயங்களைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளவும் விவாதிக்கவும் அனுமதியுங்கள்.

அதில் உடன்பாடில்லாத விஷயங்களை உங்கள் பேச்சு, வார்த்தை, முகபாகங்களால் வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரை குழந்தைகளிடம் பேசுங்கள். குழந்தைகள் பேசுவதை கவனியுங்கள். குழந்தைகளுடன் கோபமாக பேசுவது, விவாதிப்பதைத் தவிர்த்து, 'உன் வார்த்தைகளால் ’அப்செட்’ ஆகிவிட்டேன்' என சொல்லுங்கள். இதன் மூலம், உங்களுடன் எப்படிப் பேச வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்.



5. பையன்கள் இதைச் செய்ய கூடாது? பெண்கள் அதைச் செய்ய கூடாது என சொல்லக் கூடாது. குழந்தைகள் பாலின வேறுபாடின்றி வளர்வது பல சமூகப் பிரச்னைகளை குறைக்கும். வளரும் பருவத்தில் பாலின ரீதியான விதிமுறைகளை வகுக்கக் கூடாது. இருபாலின குழந்தைகளையும் சமமாக பாவிக்க வேண்டும். இது, பெண்களுக்கான வேலை, இது பையன்களுக்கான வேலை எனப் பிரிக்க கூடாது. வீட்டு வேலையில் ஆரம்பித்து அனைத்தையும் இருபாலினத்தவரும் கற்றுக்கொள்ள, தெரிந்துகொள்ள வாய்ப்பளியுங்கள்.

6. 'அப்பா வரட்டும் உனக்கு இருக்கு, உங்க மிஸ்கிட்டே சொல்லிடறேன்' போன்ற வார்த்தைகள் கூடாது. குறிப்பாக, அம்மாக்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார்கள். இது தாயின் இயலாமையின் வெளிப்பாடே. ஆசிரியரையும் அப்பாவையும் பயமுறுத்தும் பிம்பமாக உருவாக்குவது அவர்கள் மீது பயத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். ஒவ்வொரு நாளும் பயத்துடன் கழிக்கும் சூழலை குழந்தைகளுக்கு உருவாக்காதீர்கள். குழந்தைகள் தவறு செய்யும்போது, அந்த விஷயத்தை அப்பாவிடம் அவர்களே தெரியப்படுத்தி திருத்திக்கொள்ள அனுமதியுங்கள்.

7. 'உன்னை மாதிரி ஒரு பிள்ளையை யாருக்குமே பிடிக்காது. யாருமே உன்னை வெச்சுக்க மாட்டங்க' போன்ற வார்த்தைகள் கூடவே கூடாது. எடுத்துக்காட்டாக, குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது அதிக சத்தத்தை ஏற்படுத்தினால், 'கத்தாதே... வெளியே போ!' என்று நாமும் கத்தாமல், 'மெதுவாகப் பேசுங்கள். அல்லது வெளியே விளையாடுங்கள்' என்று கூறலாம். உங்கள் குழந்தை சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால், எதனால் என்பதை ஆராய்ந்து சரிசெய்யுங்கள்.

உங்கள் செல்லக் குழந்தையின் கோபத்தை சமாளிக்க வழிகள்(How to Control anger in Children?)



குழந்தைகளை கையாளுவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. அவர்களை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம். இதோ குழந்தைகள் கோபம் கொள்ளும்போது அவர்களை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம்.

குழந்தைகள் கோபம் கொண்டு அழும்போதோ அல்லது ஏதாவது பொருட்களை தூக்கி உடைக்கும்போதோ, பதிலுக்கு நாம் அவர்கள் மேல் கோபம் கொள்ள கூடாது. அந்த நேரங்களில் அமைதி காப்பது வேண்டாத விளைவுகளைத் தடுப்பதுடன், குழப்பங்களையும் குறைக்கும். உங்கள் அமைதியான நிலை, கோபத்தில் இருக்கும் உங்கள் குழந்தையை அமைதிப்படுத்தும். குழந்தைகள் அமைதியடைந்தவுடன் அவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள்.

குழந்தைகள் கோபத்தின் உச்சிக்கு செல்லும்போது பதிலுக்கு நீங்களும் கோபத்தின் உச்சிக்கு சென்று அவர்களை அடிக்க கூடாது. அவ்வாறு உடல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டால், பின்னர் குழந்தைகளை அமைதிப்படுத்தும் உங்கள் முயற்சியில் நீங்கள் நம்பிக்கையிழக்க வேண்டியிருக்கும். கலவரம் புகுந்து கொண்டு அமைதி என்பது பெற முடியாத ஒன்றாக ஆகிவிடும். உடல் ரீதியான உணர்வு வெளிப்பாடுகள் உங்கள் குழந்தையின் உணர்வுகளைத் தூண்டும் விதமாக அமைந்து, உங்கள் எதிர்ப்பார்ப்பிற்கு நேர்மாறாக அவர்கள் செயல்பட வழிவகுக்கும்.

அவ்வாறு கோபம் கொள்வது எந்த விதத்திலும் நிலைமையை சரிசெய்யவோ அல்லது அமைதியை ஏற்படுத்தவோ உதவாது என்பதால், இந்த வழிமுறை பயனற்றுவிடுகிறது.

கோபத்திற்குப் பிறகு அமைதி திரும்பியவுடன், நடந்தவற்றைக் குறித்துப் பேசுவது மிகவும் முக்கியம். குழந்தையை அரவணைத்துப் பேசுவதன் மூலம் அந்தக் குழந்தை தான் கவனிக்கப்படுவதை உணர்கிறது. கோபத்தின் போது உணர்வுகளை வெளிக்காட்ட உள்ள பல்வேறு வழிமுறைகள் குறித்து குழந்தைக்கு அறிவுறுத்துவது ஒரு சிறப்பான தொடக்கமாக அமையும்.

நீங்கள் கோபத்தை எப்படி சமாளிப்பீர்கள் என்று காண்பியுங்கள். மற்றவர்களை பார்த்து தெரிந்து கொள்வதில் குழந்தைகள் கில்லாடிகள். இதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கோபத்தை சமாளிப்பது எப்படி என்பதைக் காண்பிப்பது அவசியமாகிறது. உங்களை வெறுப்படையச் செய்யும் விஷயங்களைக் குறித்துப் பேசுங்கள்.

நீங்கள் அதை எப்படிச் சமாளிப்பீர்கள் என்பதை எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி அவர்களுக்குக் காட்டுங்கள். குழந்தை தேவையான போது உங்களை அரவணைக்க ஊக்கப்படுத்துங்கள்.



Gadget use

Image may contain: one or more people and text

கார்ட்டூன்கள் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள்!!!(Impact of cartoons on kids)

(Thanks to Penmai.com)
கார்ட்டூன்களை ரசிப்பது ஒரு வகையில் பயனுள்ள பொழுதுபோக்காக இருந்தாலும், கார்ட்டூன் மீதான மோகத்திற்கு அடிமையாக மாறும்போது கதை வேறாகிறது. கார்ட்டூன்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். கார்ட்டூன்கள் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பாகமாக மாறி வருகின்றன.

குழந்தைகளை உணவு உண்ண வைப்பதற்காகவும் , தங்களுக்கு ஓய்வு வேண்டும் என்பதற்காகவும், தங்களின் வேலைகளில் தொந்தரவின்றி ஈடுபடவும், குழந்தைகளை கார்ட்டூன் திரைகளின் முன் விட்டுச் செல்லும் பல பெற்றோர்கள் இங்கு உள்ளனர்.

நீங்கள் அத்தகைய பெற்றோர்களில் ஒருவராக இருந்தால், குழந்தைகைளின் வளர்ச்சியில் கார்ட்டூன்கள் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது. தினமும் கார்ட்டூன் பார்ப்பது குழந்தைகளை இப்பழக்கத்திற்கு அடிமை ஆக்குகிறது. இது அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கிறது. கார்ட்டூன்கள் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாவது குழந்தைகளின் கற்பனைத் திறனை பாதிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அவர்கள் உண்மையான உலகத்தினின்றும் , அனுபவங்களினின்றும் விலக்கி வைக்கப்படுகின்றனர். படுக்கையில் இருந்து கார்ட்டூன் பார்ப்பதை விட வெளியில் சென்று விளையாடுவதில் பல நன்மைகள் உள்ளன. கார்ட்டூன்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி இன்று விவாதிக்கலாம்.
மொழிவளர்ச்சி குறைபாடு
பெரும்பாலான கார்ட்டூன்கள் சரியான சொல்லகராதியை உபயோகிப்பதில்லை. இது உங்கள் குழந்தைகளையும் தவறான மொழி ஆளுமையை பின்பற்ற செய்கிறது. குழந்தைகள் சாதாரணமாக பேசுவதை விட்டு தங்களுக்கு விருப்பமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல பேச முயற்சிக்கின்றன.இது கார்ட்டூன்கள் குழந்தைகளை பாதிக்கும் விதங்களில் ஒன்றாகும்



பார்வைக் குறைபாடுகள்
தொடர்ச்சியாக கணினி மற்றும் டேப்லெட்களின் பிரகாசமான ஒளிக்கு ஆட்படுவது உங்கள் செல்லக் குழந்தைகளின் கண்களுக்கு ஏற்றதில்லை.இத்திரைகளின் மும் கணிசமான நேரத்தை செலவிடுவது நாளாவட்டத்தில் உங்கள் குழந்தையின் கண் பார்வையை பாதிக்கும்.


குறைவான உடல்
உழைப்பு கார்ட்டூன்களுக்கு அடிமையாவது குழந்தைகளை அதிக நேரம் வீட்டினுள்ளே இருக்க வைக்கிறது . வெளியே விளையாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அவர்கள் உணர்வதில்லை. வெளியே விளையாடுவது அவர்களுக்கு இயற்கையை தெரிந்து கொள்ள உதவுவதோடு அவர்களை துடிப்போடு இருக்க வைக்கிறது.


மனவியல் குறைபாடுகள்
கார்ட்டூன்கள் முன் அதிக நேரம் செலவழிப்பது குழந்தைகளின் தனிமை மனப்பான்மைக்கும் , அலட்சிய மனப்பான்மைக்கும் மூல காரணங்களில் ஒன்றாகும். இதனால் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. இது அவர்களின் சமூக நடத்தையையும் பாதிக்கிறது.


தவறான உணவு

முறை கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகள் திரைக்கு முன் அமர்ந்து சாப்பிடவே முற்படுவர். இதுவே குழந்தைகளின் தவறான மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறைக்கு மூல காரணமாகும். குழந்தைப் பருவத்தில் ஒருவர் பழகும் உணவு முறையே இறுதி வரை நிலைத்திருக்கும்.



பாதிக்கப்படும் சமூக வாழ்க்கை
கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாவது குழந்தைகளின் சமூக வாழ்வை பாதிக்கிறது . பிற சமவயது குழந்தைகளுடன் விளையாடுவதில் அவர்களுக்கு ஈடுபாடு இருப்பதில்லை. இது அவர்களை சமூக வாழ்வினின்றும் தனித்திருக்க செய்கிறது. சமூகத்தோடு ஒன்றி இருக்கப் பழகாவிடில் குழந்தைகள் எதிர்காலத்தில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.




வன்முறை

குழந்தைகள் பலவிதங்களில் பெற்றோரை விட மேம்பட்டவர்களாக இருக்கின்றனர்.நாம் ஒரு காலத்தில் டாம் அன் ஜெர்ரி கார்ட்டூன் பார்ப்பதை விரும்பினோம். ஆனால்நமது குழந்தைகள் வன்முறை சார்ந்த கார்ட்டூன் மற்றும் வீடியோ கேம்களைவிரும்புகின்றனர். இது கார்ட்டூன் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் தீவிரமானவிளைவுகளில் ஒன்றாகும். குழந்தைகள் தாமாக எந்த பழக்கத்தையும் வளர்த்துக்கொள்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் என்ன சொல்லிக் கொடுக்கிறீர்கள்
, என்ன செய்கிறீர்கள்என்பதில் இருந்தே குழந்தைகளின் பழக்கங்கள் உருவாகின்றன. கார்ட்டூன் குழந்தையைஎவ்வாறு பாதிக்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். குசந்தைகள் கார்ட்டூன் பார்க்கும்நேரத்தை புத்திசாலிதனமாக முறைப்படுத்துவதோடு அவர்களை வெளியே விளையாடவும்பழக்கப்படுத்துங்கள்


கார்ட்டூன், குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில், தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. குழந்தைகளை, உணவு சாப்பிட வைப்பதற்காகவும், தங்களின் வேலைகளில் தொந்தரவின்றி ஈடுபடவும், கார்ட்டூன் திரைகளின் முன், குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர் அதிகளவில் உள்ளனர்.

நீங்கள், அப்படிப்பட்ட பெற்றோரில் ஒருவராக இருந்தால், குழந்தைகளின் வளர்ச்சியில், கார்ட்டூன்கள் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைப் பற்றியும், சிந்திக்க வேண்டிய நேரம் இது.

கார்ட்டூன் பார்ப்பது, குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பெரிதாக பாதிக்கிறது. கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாவது, குழந்தைகளின் கற்பனைத் திறனை பாதிப்பதாக, பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புறவெளியில் விளையாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை, அவர்கள் உணர்வதில்லை. புறவெளியில் விளையாடுவது, அவர்களுக்கு இயற்கையை தெரிந்து கொள்ள உதவுகிறது; கூடவே, துடிப்போடு இருக்கவும் வைக்கிறது.

பெரும்பாலான கார்ட்டூன்கள், சரியான சொல்லகராதியை உபயோகிப்பதில்லை. இதனால், தவறான மொழி ஆளுமையை பின்பற்ற வைக்கிறது. குழந்தைகள் சாதாரணமாக பேசுவதை விட்டுவிட்டு, தங்களுக்கு விருப்பமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல் பேச முயற்சிக்கின்றன. இது, கார்ட்டூன்களால் குழந்தைகள் பாதிப்படையும் காரணிகளில் ஒன்று.

கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகள், திரைக்கு முன் அமர்ந்து சாப்பிடவே முற்படுவர். இதுவே, குழந்தைகளின் தவறான மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறைக்கு மூலக் காரணம்.

குழந்தைப் பருவத்தில் ஒருவர் பழகும் உணவு முறையே, இறுதி வரை நிலைத்திருக்கும். கார்ட்டூன்கள் முன், அதிக நேரம் செலவழிப்பது, குழந்தைகளுக்கு தனிமை மனப்பான்மைக்கும், அலட்சிய மனப்பான்மைக்கும் வித்திடும். இதனால், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, அவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. இது, அவர்களின் சமூக நடத்தையையும் பாதிக்கிறது.

எஸ். எஸ்தர் பிலோமினா,
மனநல ஆலோசகர்,
சென்னை.


Parenting tips - குழந்தை வளர்ப்பு

Thanks to Penmai.com

டிவி பார்க்காதேன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள மூணு சேனல் மாத்திடறான். ஃபிரிட்ஜை திறக்காதேடான்னா அதைத்தான் செய்வேன்னு அடம்பிடிக்கிறான்... தண்ணியிலே விளையாடாதே, சளி பிடிக்கும்னு கரடியா கத்துனாலும் காதே கேட்காதமாதிரி தண்ணியில விளையாடுறா என் பொண்ணு... எதை செய்யாதேன்னு சொன்னாலும் அதைத்தான் செய்வேன்னு அடம்பிடிக்கிறா...
பெரியவங்க பேசும்போது வாயைப் பார்த்துக்கிட்டு நிக்காதேன்னு எத்தனையோ முறை சொல்லியாச்சு... திருந்தறதாவே இல்லை... இவங்களை எப்படி வழிக்குக் கொண்டுவர்றதுன்னே தெரியலை" - பெரும்பாலான பெற்றோரின் புலம்பல் இதுதான்.

'"
முதலில் இப்படிப் புலம்புவதை பெற்றோர் நிறுத்த வேண்டும். ஒரு பொருளை மூடிவைத்திருந்தால் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வம் எழுவது எப்படி இயல்பானதோ, அதேபோலதான் செய்யாதே என்று சொல்வதை செய்துபார்க்க நினைப்பதும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இதே மனநிலை இருக்கும். நீங்கள் செய்யாதே என்று சொல்லியும் உங்கள் குழந்தை அதைச் செய்கிறது என்றால், நீங்கள் சொல்லும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். 'அதைச் செய்யாதே... இதைத் தொடாதே' என்று வீடே அதிரும்படி கத்தக் கூடாது. 'சொல்வதை மீறி இப்படிச் செய்தால் என்ன செய்வேன் தெரியுமா?'என்று மிரட்டவும் கூடாது. குழந்தைகளை எப்போதுமே இதுபோல நெகட்டிவாக அணுகுவதைத் தவிர்ப்பது நல்லது. இப்படி பேசினால் அவர்கள் எரிச்சல் அடைவார்கள். அதற்காகவே உங்கள் வார்த்தையை மீறி, நீங்கள் வேண்டாம் என்று சொன்னதைச் செய்துகாட்ட நினைப்பார்கள்.
உங்கள் அதிரடி அணுகுமுறையைக் கொஞ்சம் மாற்றி, இதமாக எடுத்துச் சொல்லிப் பாருங்களேன். வேண்டாத, உடலுக்குத் தீங்குதரக்கூடிய செயல்களை குழந்தை செய்தால் ஆத்திரப்படாமல் வார்த்தைகளில் குழைவைக் கூட்டி, 'அதையெல்லாம் செய்யக்கூடாது கண்ணா...' என்று சொன்னால் அதற்குக் கிடைக்கும் ரிசல்ட்டே தனிதான். அதையும் மீறி குழந்தை செய்தால், 'நீ இப்படி செய்தால் இப்படி ஏற்படலாம்' என்று அந்தச் செயலால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். தேவைப்பட்டால் உங்கள் கற்பனையைச் சேர்த்து அவர்களை மிதமாக பயமுறுத்தலாம். இப்படிச் சொல்லும்போது நீங்கள் அந்த இடத்தில் இருந்தாலும் இல்லையென்றாலும், அடுத்தமுறை அந்தச் செயலை செய்ய குழந்தை யோசிக்கும். இதுதான் உங்கள் வெற்றி!
பலமுறை எடுத்துச் சொல்லியும் மசியாத குழந்தைகளை என்ன செய்வது? வேறு வழியே இல்லை. அவர்கள் வழிக்கு நீங்கள் செல்ல வேண்டியதுதான். தேவையற்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடும்போது, அவர்களுக்கு ஆர்வமான விளையாட்டுகளைப் பற்றி பேசி அவர்களது கவனத்தை திசைதிருப்பலாம். உதாரணமாக, படிக்கிற நேரத்தில் விளையாடக் கூடாது என்று கண்டிப்பு காட்டாமல், படித்து முடித்துவிட்டால் அடுத்து என்ன புது விளையாட்டு விளையாடலாம் என்று குழந்தையிடமே ஆலோசனை செய்தால், குழந்தை உற்சாகமாகி படிக்கத் துவங்கிவிடும். தவிர, எப்போதும் படிப்பைப் பற்றி மட்டுமே அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தால், படிப்பின் மீதே வெறுப்பு வந்துவிடும். இதைவிட, படிப்பதால் கிடைக்கும் பலன்களையும் அதனால் அவர்களுக்குக் கிடைக்க இருக்கும் பெருமையையும் எடுத்துச் சொல்லலாம். 'நீ நல்லா படிச்சாதான் புதுப்புது விளையாட்டுகளைப் புரிந்துகொள்ள முடியும். அதற்கும் அறிவு வேண்டும் இல்லையா?' என்று சொன்னால் எந்தக் குழந்தைதான் படிப்பை வெறுக்கும்?
தன் குழந்தை படிக்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டுடன் என்னிடம் ஒரு தம்பதி வந்தனர். எப்போதும் நீச்சல் அடிப்பதால் படிப்பு கெட்டுவிடுகிறது என்பது அவர்கள் வாதம். குழந்தையை வெளியே அனுப்பிவிட்டு அந்தப் பெற்றோருக்குத்தான் முதலில் கவுன்சிலிங் கொடுத்தேன். 'குழந்தை நீச்சல் அடிப்பதை ஊக்கப்படுத்தாமல், எப்பவும் படிப்பையே அவனுக்கு நினைவுபடுத்திக்கொண்டு இருக்காமல், நீச்சல் பற்றியும் அவனிடம் கலந்துபேசுங்கள். அந்தப் பேச்சுக்கு நடுவே விளையாட்டாகவே படிப்பைப் பற்றி நினைவூட்டுங்கள். அதனால், அவனுக்கே படிப்பின் மேல் அக்கறை வரும்" என்றேன். இப்போது அந்தக் குழந்தை படிப்பிலும் கெட்டிக்காரனாக இருக்கிறான், நீச்சல் போட்டிகளிலும் முன்னேறிவருகிறான்.
குழந்தைகள் எப்போதும் பெற்றோரின் மனநிலைக்கு வரமாட்டார்கள். பெற்றோர்தான் குழந்தைகளின் மனநிலைக்கு இறங்கிப்போக வேண்டும். அவர்களை, அவர்கள் போக்கில் விட்டுத்தான் நம் வழிக்குக் கொண்டுவர வேண்டும். அப்பா, அம்மா சொல்வது நம் நல்லதுக்குத்தான் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்கு குழந்தைகள் உலகத்துக்குள் நாம் செல்ல வேண்டும். அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவேண்டும். அவர்களுக்குப் பிடித்த விஷயங்கள் குறித்துப் பேச வேண்டும். ஒரே வரியில் சொல்வதென்றால், அவர்களை நண்பர்களாக அணுக வேண்டும்" .

குழந்தை வளர்ப்பு

அச்சுறுத்தும் டெங்குக் காய்ச்சல்... குழந்தைகளைக் காக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? #Dengue

த மிழகத்தை அச்சுறுத்திவருகிறது டெங்குக் காய்ச்சல். இந்த வைரல் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவருக...