Showing posts with label Exam. Show all posts
Showing posts with label Exam. Show all posts

இதெல்லாம் செய்தால் டாப் ஸ்கோர் எடுக்கலாம்! சென்ற ஆண்டின் முதல் மாணவி தரும் டிப்ஸ்!

டாப் ஸ்கோர்
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. காலையில் அலாரம் வைத்து எழுந்து படிப்பது தொடங்கி, மாணவர்களின் வழக்கமான நடவடிக்கைகள் மாறத் தொடங்கியிருக்கும். நாட்கள் நெருங்க, நெருங்க பயம் தொற்றிக்கொள்வது இயல்புதான். ஆனால், அவசியமற்ற அந்த பயத்தை ஒதுக்கித்தள்ளி, தேர்வை நம்பிக்கையுடன் எழுதுவதோடு, டாப் ஸ்கோர் எடுக்கவும் ஆலோசனைகள் தருகிறார் ஆர்த்தி.
ஆர்த்தி யார் என்று தெரியும்தானே?! சென்ற ஆண்டு 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்த மாணவி. தற்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் முதல் வருடம் மருத்துவம் படித்துவருகிறார்.
''தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு முதலில் வாழ்த்துகள். தேர்வுக்கு இன்னும் முழுதாக மூன்று மாதங்கள் இருக்கின்றன. அதனால் பதட்டமோ, பயமோ வேண்டாம்.  நான் சென்ற ஆண்டில் படித்தபோது கடைப்பிடித்த பழக்கங்கள் சிலவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.
* இப்போது, அதிகாலையில் எழுந்து படிப்பதோடு இரவில் அதிகநேரமும் படிக்கலாம். ஆனால் தேர்வு நெருங்கும்போது, (15 நாட்களுக்கு முன்பிருந்து) இரவு அதிகநேரம் கண் விழித்துப் படிக்காதீர்கள். அப்படிச் செய்தால், பகலில் உடல் சோர்வாகி, தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்படலாம்.
* உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் தேர்வுக்கு தயாராவதில் முக்கியமான அம்சம். உங்களுக்கு எவ்வளவு பிடித்தமான உணவு என்றாலும், உடலுக்கு ஒவ்வாமை தரும் என்றால் அதைத் தவிர்த்துவிடுங்கள்.

* பொதுவாக, 'விடைகளை எழுதிப் பாருங்கள்' என யோசனை சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை எழுதிப் பார்க்கும் நேரத்தில், அதிக வினாக்களுக்கான விடைகளைப் படித்துவிடலாம் என்பேன். ஏனெனில், பல ரிவிஷன் தேர்வுகளில் பதில்களை எழுதிக்கொண்டிருப்போம். அதனால் அதையே திரும்பச் செய்ய வேண்டியதில்லை. வேண்டுமானால், ரிவிஷன் தேர்வு விடைத்தாளில் நாம் செய்த தவறுகளை கவனத்தில் கொண்டு, மீண்டும் அதேபோல வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

* ஆசிரியர்களின் உதவியைப் பெற எந்தத் தயக்கமும் கொள்ளாதீர்கள். சிலருக்கு எந்தப் பகுதியிலிருந்து படிக்கத் தொடங்குவது என்பதில் குழப்பம் இருக்கும். பாடத்தின் சில பகுதிகள் புரியாதவர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு ஆசிரியரின் வழிகாட்டல் அவசியம்.
* பொதுத்தேர்வின்போது, இரண்டு பேனாக்கள் வைத்திருப்பது தொடங்கி, என்னவெல்லாம் செய்ய திட்டமிட்டிருப்பீர்களோ அதை ரிவிஷன் தேர்வுகளிலிருந்தே செய்யத் தொடங்குங்கள்.
* தேர்வு அறைக்குள் செல்லும் நிமிடம் வரை படிப்பதால் தேவையற்ற பதட்டமே வரும். அதற்கு முந்தைய 15 நிமிடங்களுக்கு புத்தகங்களை மூடி வைத்துவிட்டு, அமைதியான மனதுடன், தேர்வை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.

* ஒரு மதிப்பெண் வினாக்களைத் தனி கவனம் எடுத்து படியுங்கள். அதில் அதிக குழப்பமே, நான்கு ஆப்ஷனில் ஏதோ இரண்டு சரியான விடைகள் போல நமக்குத் தோன்றுவதுதான். அதனால் முதலில் அந்தக் கேள்வியை மட்டும் படியுங்கள். அதற்கான பதிலை உங்களின் நினைவிலிருந்து தேடி, கண்டுபிடியுங்கள். பிறகு, ஆப்ஷன்களைப் இப்படிச் செய்யும்போது குழப்பங்கள் பெருமளவு தீர்ந்துவிடும்.
* பெரிய வினாக்களை தேர்வு செய்யும்போது 'பிராப்ளம்' சால்வ் செய்யும் விதமான வினாக்களைத் தேர்தெடுக்கலாம். ஏனெனில் எல்லாம் எழுதி முடித்த பிறகு, சரியான முறையில் சால்வ் பண்ணியிருக்கிறோமா என்று நாமே செக் பண்ண முடியும்.

* சில வினாக்களுக்கான விடைகள் படிக்கும்போதே சிரமமாக இருக்கும். அவற்றை உங்கள் நண்பர்களோடு சேர்ந்து படிக்கலாம், விவாதிக்கலாம். அப்போது, அவர்கள் சொல்வது, அவற்றைப் புரிந்து படிப்பதற்கு உதவியாக இருக்கும்.
* தேர்வு நேரம் முடிவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே நாம் அனைத்து விடைகளையும் எழுதி முடித்திருக்க  வேண்டும். சென்ற ஆண்டு, இயற்பியல் தேர்வு எழுதி முடிக்க நேரம் போதவில்லை. அதனால் சற்று பதற்றமாகி விட்டேன். அதுபோல உங்களுக்கும் நேராதிருக்க, ரிவிஷன் தேர்விலேயே குறிப்பிட்ட நேரத்துக்குள் பரிட்சையை முடிக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள்.

* தேர்வு எழுதி முடித்தவுடனே, சிலர் விடைத்தாளை அழகாக்கும் விதத்தில் பார்டர் வரைய  ஆரம்பித்துவிடுவார்கள். அது தவறில்லை. ஆனால் அதற்கு முன்பு, வினா எண்களைச் சரியாக எழுதியிருக்கிறோமா, விடைகளில் ஏதேனும் தவறுகள் இருக்கின்றனவா என்பதை செக் பண்ண வேண்டும். அவற்றைச் செய்தபின்னும் நேரம் இருந்தால், அதை அழகுபடுத்தச் செலவிடலாம்.
அப்பறம் நண்பர்களே... இந்த ஆலோசனைகள் பொதுவானவை. ஆனால் உங்களுடைய பலம், பலவீனம் இரண்டும் ஒருவருக்கு மட்டுமே நன்றாக தெரியும். அவர், நீங்கள்தான். அதனால் பலவீனங்களை எப்படி குறைப்பது, பலத்தை இன்னும் எப்படி அதிகப்படுத்துவது என்ற வழிகள் உங்களுக்கே தெரிந்திருக்கும். அவற்றையும் இந்த ஆலோசனைகளோடு சேர்ந்து செயல்படுத்துங்கள். இந்த ஆண்டு பொதுத் தேர்வை வெற்றிக்கரமாக எழுதுங்கள். நிச்சயம் டாப் ஸ்கோர் பெறலாம்!"
https://www.vikatan.com/news/health/children-foods/75966-tips-for-public-exam.html?artfrm=related_article

தேர்வு துவங்கியாச்சு... டிவியை ஆஃப் பண்ணலாமா? சில டிப்ஸ்

தேர்வு

தேர்வுக்காலம் துவங்கி விட்டது. சற்று வளர்ந்த பிள்ளைகள் தங்கள் பொறுப்பு உணர்ந்து படித்தாலும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் இருந்து தொலைக்காட்சியை அப்புறப்படுவது கொஞ்சம் கஷ்டமான வேலைதான். அதிலும் இந்த தேர்வுக்காலங்களில் மட்டும் "டிவி பார்க்காதே" என்று தடுத்தால் நம்மை விடப் பெரிய வில்லன் யாருமே அவர்களுக்கு இருக்கப்போவதில்லை. பொதுவாகக் குழந்தைகளின் டிவி பார்க்கும் நேரத்தை முறைப்படுத்த சில டிப்ஸ்கள்;
பெற்றோர் ஆகிய நீங்களும் சரி குழந்தைகளும் சரி ஒரு முக்கியச் செயலை செய்ய வேண்டும். அது அவரவருக்கான சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டும் தேர்வு செய்து கொள்வது. எடுத்துக்காட்டுக்கு நீங்கள் "தெய்வமகள்" தொடர் பார்க்கிறீர்கள் என்றால் அந்த நேரம் மட்டும் ஆன் செய்து பார்த்து விட்டு அணைத்து விடுவது. குழந்தைகளுக்குப் பிடித்த ஏதோவொரு கார்ட்டூனை மட்டும் பார்த்து விட்டு அணைத்து விடுவது. இப்படிச் செய்யப் பழகவேண்டும். தொடர்ந்து தொலைக்காட்சியை ஓடவிட்டுக்கொண்டிருப்பது அறவே கூடாது. அது உளவியலாகவே குழந்தைகளின் கற்கும் திறனைப் பாதிக்கும்.
சில விஷயங்களில் குழந்தைகளிடம் கண்டிப்பாகத்தான் இருக்கவேண்டும். கண்டிப்பாக ஹோம் ஒர்க்கை முடித்த பின்னரே டிவி பார்க்க அனுமதிக்க வேண்டும்.அந்த அனுமதியும் குறிப்பிட்ட நேரத்திற்கு உரியதாக இருக்க வேண்டும். முடிந்தவரை படிப்புக்குப் பின்னர் உங்கள் கண்காணிப்பில் விளையாட அனுமதிப்பது சிறந்தது.
டிவி என்பதைப் பொழுதுபோக்குக்கான ஒன்று என்பதை மெல்ல மாற்ற முயலுங்கள். புதிர் விளையாட்டு, விடுகதை, கதைகள் எனத் தொடர்ந்து குழந்தைகளுடன் நீங்கள்  இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள். உண்மையில் இதைத் தொடர்ந்து செய்தால் ஓய்வு கிடைத்தால் டிவி ரிமோட்டை தேடும் பழக்கம் வெகுவாக குறையும்.
உணவு சாப்பிடும் போது கண்டிப்பாக டிவியை அணைத்து வையுங்கள். அந்தப்பழக்கம் உங்களிடம் இருந்தாலும் உடனே கைவிடுங்கள். கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வில் டிவி பார்த்துக்கொண்டே உணவு உண்ணும் குழந்தைகளை விட, டிவி பார்க்காமல்  உண்ணும் குழந்தைகளிடம் டிவி மோகம் மிகவும் குறைவு எனத் தெரியவந்துள்ளது.
முடிந்த அளவு டிவியை அணைக்கும் போது ரிமோட்டை அதன் அருகிலேயே வைக்கவேண்டாம். தேடி எடுக்கும் வேலையைச் செய்யப்பிடிக்காமல் வேறு பொழுதுபோக்குகளை குழந்தைகள் தேடுவார்கள்.
ஹோம் ஒர்க்கை முடித்தால் டிவி பார்க்கலாம். நல்ல மதிப்பெண் வாங்கினால் நிறைய நேரம் டிவி பார்க்க அனுமதி கிடைக்கும் என்றெல்லாம் டிவியை ஒரு பரிசுப்பொருளாக மாற்றாதீர்கள். அவர்களின் கவனமெல்லாம் அதை நோக்கியே இருக்கும்.
டிவி பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் கையில் நொறுக்கு தீனியை கொடுப்பது அவர்களை அதற்கு அடிமையாக்கும் முக்கியமான செயல். முடிந்த அளவு அதைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளின் போது அளவு தெரியாமல் உண்பதால், ஒபிஸிட்டி குழந்தைகள் உருவாகும் முக்கிய காரணமாக இதைச்சொல்கிறனர்.
இந்தியக் குடும்பங்களின் முக்கியத் தவறாக சொல்லப்படுவது குழந்தைகளின் கூச்சலையும், குறுப்புத்தனத்தையும் கட்டுப்படுத்தும் செயலாக நாள் முழுவதும் டிவியை ஓட விடுவதைச் சொல்கிறார்கள். மற்ற அனைத்தையும் விட இதுதான் முக்கியமான ஒன்று. எனவே தேர்வு நேரங்களில் மட்டும் டிவியை நிறுத்தாது பொதுவாகவே அளவான முறையில் பார்க்க வாய்ப்பளிப்பது குழந்தைகளின் படிப்புக்கு நல்லது.

உங்கள் குழந்தைகள் தேர்வு எழுதப் போகிறார்களா? இந்த 10 விஷயங்கள் அவசியம் பெற்றோரே

தேர்வு
ன்றைய குழந்தைகளின் எக்ஸாம் ஃபீவர், பெற்றோரையும் சேர்த்தே தொற்றிக்கொள்கிறது. 'படி படி' எனப் பெற்றோர் படுத்துவதால், குழந்தைகள் அதிகளவில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தேர்வு நேரத்தைக் குழந்தைகள் டென்ஷன் இல்லாமல் கடக்க, பெற்றோர் இந்த 10 விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
1. குழந்தைகளின் கல்வியாண்டு தொடங்கியதிலிருந்து பலவித டேர்ம் தேர்வுகள் நடக்கிறது. எப்போது எந்தத் தேர்வு வர உள்ளது என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு தேர்வும் எந்த மாதங்களில் நடக்கும் என்பதைப் பட்டியலிட்டு, பார்வையில் படும் இடத்தில் மாட்டிவைக்கலாம். மனம் தானாக தேர்வுக்குத் தயாராகிவிடும்.
2. பள்ளியில் உங்கள் குழந்தைகளின் மனதில் எந்த அளவுக்கு ஸ்ட்ரெஸ் ஏற்றி அனுப்புகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த அழுத்தங்களில் இருந்து விடுபடும் வாய்ப்புகள் அவர்களுக்கு அளிக்கப்படுவது அவசியம். வீட்டுச் சூழல் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும். பதற்றத்தை அவர்கள் மனதில் ஏற்றி பயப்படுத்துவதைத் தவிர்க்கவும்.
படிப்பு3. தேர்வுக்குத் தயாராகும் குழந்தையின் குட்டி தம்பி அல்லது குட்டி தங்கையின் குறும்பும் விளையாட்டும் படிக்கும் குழந்தையைப் பாதித்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.
4. படித்ததை நினைவில் நிறுத்தும் வழிமுறைகளைக் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவும். உங்கள் குழந்தைப் பார்த்துப் படிப்பது, கேட்டுப் படிப்பது, எழுதிப் பார்த்துப் படிப்பது இவற்றில் எதில் பலமா இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அந்த வழியில் அவர்களை வழிநடத்துங்கள். எந்த நேரத்தில் எதைப் படிப்பது என்பதற்கான நேரத் திட்டமிடலுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். பழைய கேள்வித்தாள்களை ரிவிஷன் செய்வதும் எழுதப்போகும் தேர்வுக்கு உதவியாக இருக்கும்.
5. படிப்பதற்கு என்று வீட்டில் தனியாக இடம் ஒதுக்கவும். அங்கே வேறு எந்தத் தொந்தரவும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
6. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால், அதற்கான பரிசு வீட்டில் கிடைக்கும் என்ற இனிய நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். அடிக்கடி சொல்லி உற்சாகப்படுத்துங்கள். தேர்வுக்குப் படிப்பது, பரிசுக்கான பயணமாக அவர்களை உற்சாகமாகச் செயல்படவைக்கும்.
7. குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியம். குழந்தைகளுக்குப் பிடித்த உணவு வகைகளை சமைத்துக் கொடுப்பதில் தயக்கம் வேண்டாம். காய்கள், கீரை வகைகளும் சேர்த்து உணவை சத்துமிக்கதாக மாற்றுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் உணவுகள் அவசியம். அன்பு கலந்த ஆரோக்கியம் உங்கள் குழந்தையின் உடலையும் மனதையும் வலிமைப்படுத்தும்.
குழந்தைகள்
8. மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பதில் பழங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நொறுக்குத்தீனியாக பாக்கெட் உணவுகளைத் தவிர்க்கவும். சுண்டல் வகைகள், வீட்டிலேயே செய்த முறுக்கு, வெஜ் சூப் எனச் சுவையாகச் செய்துகொடுத்து குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள்.
9. என்னதான் விழுந்து விழுந்து படித்தாலும், குழந்தைகளின் கவனம் ஒரு விஷயத்தில் குறிப்பிட்ட நிமிடங்கள் மட்டுமே இருக்கும். தொடர்ந்து பல மணி நேரம் படிக்கவைக்காமல், குறிப்பிட்ட இடைவெளி கொடுக்கவும். உடற்பயிற்சியும் போதிய தூக்கமும் மூளையைச் சுறுசுறுப்பாக்கும். அதற்குச் சரியாகப் பழக்கப்படுத்தவும்.
10. தேர்வு வரப்போகிறது என்பதற்காக, எல்லாவற்றையும் நிறுத்தி, கடுமையாக நடந்துகொள்வது சரியல்ல. கொஞ்சம் சினிமா, விளையாட்டு, ஃப்ரெண்ட்ஸ் அரட்டை, அவுட்டிங் என ரிலாக்ஸ் செய்துகொள்ள அனுமதிக்கவும்.
குழந்தைகள் படிக்கும் வீடுகளில் பெற்றோர் இவற்றை நடைமுறைப்படுத்தினால், தேர்வு பயம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
Thanks to Ananda Vikatan
https://www.vikatan.com/news/miscellaneous/100514-these-ten-things-will-help-your-kids-do-better-in-exams.html?artfrm=related_article

குழந்தை வளர்ப்பு

அச்சுறுத்தும் டெங்குக் காய்ச்சல்... குழந்தைகளைக் காக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? #Dengue

த மிழகத்தை அச்சுறுத்திவருகிறது டெங்குக் காய்ச்சல். இந்த வைரல் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவருக...