குழந்தைகள் கண்ணாடி அணியும் சூழல் ஏன் வந்தது?

சமீபகாலமாக பல குழந்தைகள் கண்ணாடி அணியும் சூழலை காண்கிறோம்.
முன்பெல்லாம் அதிகமாக கண்மருத்துவர்களிடம் போனதில்லை, இப்போது விழிப்புணர்வு அதிகரித்துவிட்டது என காரணம் சொல்லபட்டாலும் அமெரிக்கா, ஐரோப்பாவிலும் குழந்தைகள் கண்ணாடி அணியும் விகிதம் அதிகரித்தே வருகிறது. அங்கே இதுபோன்ற காரணம் சொல்ல முடியாதே?
இதற்கு முக்கிய காரணமாக இப்போது சொல்லபடுவது குழந்தைகள் அதிகநேரம் வீட்டுக்கு வெளியே செலவு செய்து விளையாடாத்து என்பதே. பல பள்ளிகளும், வீடுகளும் குளிரூட்டபட்டவையாக ஆனபின் அறைகதவுகள், சன்னல்கள் மூடபட்டு பகலிலும் டியூப்லைட் வெளிச்சத்தில் வாழும் சூழல் உருவாகிவிட்டது.
அறைகளில் உள்ல வெளிச்சம் கண்பார்வைக்கு போதுமானது அல்ல. என்னதான் பிரகாசமான அறையாக இருப்பினும் அது சூரியவெளிச்சத்துக்கு ஈடானது அல்ல. கண்ணிமை தன் அளவை அதிகரித்து தான் நம் அறைவெளிச்சத்தில் நாம் படிக்க உதவுகிறது. ஆனால் இதுவே ஆண்டுக்கணக்கில் தொடர்கையில் கண்ணிமைகள் சைஸே நீளமாகி கிட்டபார்வை வந்துவிடுகிறது.
இது தொடர்பாக நடந்த ஆய்வுகளில் வாரம் 14 மணிநேரம் இயற்கையான சூரிய வெளிச்சத்தில் வெளியே விளையாடும் குழந்தைகள் தம் பெற்றோர் இருவரும் கண்னாடி அணிபவர்களாக இருந்தும் அந்த மரபணு சிக்கலையும் தாண்டி கண்பார்வை நல்லபடி உள்ளவர்களாக இருப்பதாக தெரிவிக்கிறது
ஆக தினம் 2 மணிநேரமாவது குழந்தைகள் இயற்கையான வெளிச்சத்தில் வெளியே விளையாடுவது முக்கியம்.
நான் சிறுவனாக இருந்தகாலம் வீட்டுக்குள் இருந்ததை விட வெளியே இருந்த காலம்தான் மிகுதி. இப்போது நிலைமை அப்படியே தலைகீழ்.பட்டம், பம்பரம், கிரிக்கட்,பாண்டி, கபடி எல்லாம் போய் பவுலிங், ஆங்க்ரி பேர்ட்ஸ் என மாறிவிட்டது
.
இன்னொரு டிரெண்ட் என்னவெனில் வனக்குளியல் என்பது. தினம் 15 நிமிடமாவது வெளியே வந்து எலெக்ட்ரானிக்ஸ் இல்லாமல் மரங்கள், காடுகள், பூங்காக்களின் பசுமையில் ஆழ்ந்து நிற்பது என்பது. தூக்கம் வராமல் தவிக்கும் பலருக்கும் இந்த 15 நிமிட வனக்குளியலே ஆழ்ந்த உறக்கத்தை வரவழைக்கிறதாம். அது மிக சிறந்த மன அழுத்த கட்டுபாட்டு கருவி என சொல்லி ஜப்பானில் கம்பனிகளே பணிநேரத்தில் தொழிலாளிகளை பூங்காக்கள், சோலைகளுக்கு அழைத்து சென்று வனக்குளியலில் ஈடுபடுத்துகின்றன. அந்த சமயம் அவர்கள் எலெக்ட்ரானிக்ஸ் எடுத்து வர அனுமதிக்கபடுவதில்லை. கண்கள் முழுக்க பசுமையான மரங்களை பார்க்கும் வண்ணம் அமைதியாக நடை அல்லது சும்மா மரத்தடியில் படுத்திருந்தால் கூட போதுமாம்.
நல்லவேளை...இதெல்லாம் டிரெண்ட் ஆகாததுக்கு முந்தியே நாம எல்லாம் வாழ்ந்ததே மரங்களுக்கு மத்தியில் வெளியேதான்.
அதனால் முடிந்தவரை குழந்தைகளை வெளியே கூட்டி சென்று விளையாடவிடுங்கள். வீடுகளில் மரம் வளர்க்கவும். எந்நேரமும் எலெக்ட்ரானிக்ஸில் ஆழ்ந்திருக்க விடவேன்டாம். நாங்கள் குழந்தைகளுக்கு எலெக்ட்ரானிக்ஸ் வாரம் முழுக்க அனுமதிப்பதில்லை. வெள்ளி மாலை முதல் ஞாயிறு வரை மட்டுமே மாலைகளில் அனுமதிப்போம்.


(https://www.facebook.com/groups/tamilhealth/permalink/702447733279042/)

No comments:

Post a Comment

குழந்தை வளர்ப்பு

அச்சுறுத்தும் டெங்குக் காய்ச்சல்... குழந்தைகளைக் காக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? #Dengue

த மிழகத்தை அச்சுறுத்திவருகிறது டெங்குக் காய்ச்சல். இந்த வைரல் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவருக...