ஆரோக்கியமான பொழுதுபோக்கு

  • காலை எட்டுமணிக்கு கையில் 10 கிலோ பாடபுத்தகங்களை கொடுத்து பஸ்ஸீல் ஏற்றி அனுப்பினால் மாலை 4 மணி வரை ஒரே வகுப்பில் அமர்ந்து படித்து, நடுவே 10 நிமிடம் ஒண்ணுக்கு போக பிரேக் விட்டு, 30 நிமிடம் லஞ்சு டைம் விட்டு, மாலை வீடு வந்து ஹோம் ஒர்க், டியூஷன் எல்லாம் முடிப்பதுதான் கல்விமுறையா?
  • ஐந்து, ஆறு பாடபுத்தகங்களை ஒரு ஆண்டு முழுக்க உட்கார்ந்து படிப்பது தான் கற்பதன் அடையாளமா? அவை முக்கியம்தான். ஆனால் அதைமட்டுமே படிப்பதால் வேறு எது, எதை எல்லாம் இழக்கிறோம்?
  • நாம் படித்த காலத்தில் கவனித்திருப்போம். நல்ல படிக்கும் மாணவர்கள் பற்றிய ஸ்டிரியோடைப்பை. எங்கேயும் வெளியே வரமாட்டார்கள், ஸ்போர்ட்ஸில் ஈடுபாடு இருக்காது, உலக அறிவு கிடையாது என...அதே கடைசி பெஞ்ச் மாணவர்கள் பற்றிய ஸ்டிரியோடைப் நல்லா பேச்சுதிறன் உண்டு, வாழ்க்கையை ஜாலியாக எஞ்சாய் செய்வார்கள், ஸ்போர்ட்ஸில் ஆக்டிவாக இருப்பார்கள், உடல்வலுவுடன் இருப்பார்கள் என.

  • பிரச்சனை கடைசிபெஞ்ச் மாணவர்களிடம் இல்லை. அவர்களின் சுபாவம், இயல்புக்கு ஏற்ற கல்விமுறையை அவர்களுக்கு அளிக்க நாம் தவறிவிட்டோம். நம் கல்விமுறை முழுக்க மனப்பாடம், உட்கார்ந்து ரொம்ப நேரம் படிப்பது, டியூஷன் வைத்துக்கொள்வது எனவே அமைந்துள்ளது.
  • அமெரிக்க பள்ளிகளில் ஸ்கவுட், வாலண்டியர், ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்டுகிறது. ஸ்கவுட் என சொல்லி வெளியூர்களுக்கு கேம்பிங் செல்கிறார்கள். சமைக்க, டென்ட் கட்ட, நெருப்பு மூட்ட என சர்வைவல் திறமைகளில் பயிற்சிகள் அளிக்கபடுகின்ரன. ஸ்போர்ட்ஸில் பரிசு வாங்கினால் காலேஜ் அட்மிஷனுக்கு தனியாக பாயிண்டுகள் உண்டு. 
  • உள்ளூர் லைப்ரரி, வீடற்றோருக்கு உனவளிக்கும் ஃபுட் பேன்க் மாதிரி இடங்களில் வாலண்டியராக பணிபுரிந்து, சர்ட்டிபிகெட் வாங்கி அதையும் காலேஜ் அட்மிஷனுக்கு பயன்படுத்துகிரார்கள். பல பள்ளி மாணவர்கள் ஆபிரிக்கா, தென்னமெரிக்கா எல்லாம் போய் தன்னார்வலராக பணிபுரிந்து பாயின்டுகளை சேர்த்துகிரார்கள்.
  • இப்படி எல்லாம் வெறுமனே படிப்பு, படிப்பு என மனப்பாடம் செய்யவைத்துதான் நம்மில் பலரது குழந்தைப்பருவமே அழிந்துவிட்டது. அப்படி மனப்பாடம் செய்தது எதாவது இன்று நமக்கு பயந்தருகிறதா என்றால் இல்லை. வெளியுலகில் கற்றுக்கொண்டது மட்டுமே இன்னும் நமக்கு பயனளிக்கிறது.
  • அதனால் சிஸ்டத்தை மாற்ரவேண்டும் என்பதை விட நம்மளவில் முடிந்தவரை குழந்தைகளின் சுபாவத்திற்கேற்ற கல்வியை அளிக்க முயல்வோம். அவர்களின் பொழுதுபோக்குகளை ஊக்கபடுத்துவோம். கடைசிபெஞ்ச் மாணவர்களின் திரமையை எதிலும் காட்ட இடமில்லாத சூழலில்தான் அவர்கள் ஓடும் பஸ்ஸீல் குதித்து ஏறியும், வகுப்பில் ரவுடித்தனம் செய்தும் தன் திரனை வெளிக்காட்டும் சூழல் உருவாகிறது. அதே அவர்கள் க்லைநிகழ்ச்சி, பேச்சுபோட்டி, ஸ்போர்ட்ஸ் என வருகையில் தம் திறனை எப்படி வெளிகாட்டுகிறார்கள் என்பதையும் பார்க்கவேண்டும்.
  • உங்கள் குழந்தை சரிவர படிக்கவில்லை, பொழுதுபோக்குகளில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறது எனில் ஆரோக்கியமான பொழுதுபோக்குகளில் அதை ஈடுபடுத்துங்கள். விளையாடுவதை ஓட்டுமொத்தமாக தடைசெய்வது, அதன் வளர்ச்சியையே பாதித்துவிடும். 
  • தலைமைபண்பு, ஸ்ட்ராடஜி உள்ளிட்ட பல திறமைகளை நாம் வளர்த்துக்கொள்வதே விளையாட்டுக்களில் தான். இருக்கும் கல்விமுறைக்கு ஏற்ப படிப்பையும் கைவிட்டுவிடாமல், ஆரோக்கியமான பொழுதுபோக்கு ஒன்றை அவர்களுக்கு உருவாக்கி கொடுத்தால் அவர்களும் வாழ்வில் ஜொலிப்பார்கள்.
(Thanks to Neander Selvan 
https://www.facebook.com/groups/tamilhealth/permalink/721871074670041/ )

No comments:

Post a Comment

குழந்தை வளர்ப்பு

அச்சுறுத்தும் டெங்குக் காய்ச்சல்... குழந்தைகளைக் காக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? #Dengue

த மிழகத்தை அச்சுறுத்திவருகிறது டெங்குக் காய்ச்சல். இந்த வைரல் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவருக...